முத்தரப்பு டி20: ஜிம்பாப்வேவை 100 ரன் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 05:08 pm
australia-beats-zimbabwe-by-100-runs-in-t20-tri-series

ஜிம்பாப்வேக்கு எதிராக 100 ரன் வித்தியாசத்ததில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. 

முத்தரப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 2 விக்கெட் இழந்து 229 ரன் அடித்தது. ஆரோன் ஃபின்ச் 172 ரன், ஷார்ட் 46 ரன் அடித்து ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஸ்கோருக்கு உதவினர். 

இதனை தொடர்ந்து களமிறங்கிய கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வேயால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 100 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. 

மிகப்பெரிய ஸ்கோர் அடித்த ஆரோன் ஃபின்ச்சுக்கு ஆட்ட-நாயகன் விருது வழங்கப்பட்டது.

நாளை (4ம் தேதி) நடக்கும் 4-வது போட்டியில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close