2000 ரன்களை அதிவிரைவாக கடந்து விராட் கோலி சாதனை

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 09:15 am
virat-kohli-becomes-fastest-player-to-reach-2000-run-milestone

அதிவிரைவாக 2000 டி20 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 20 ரன் அடித்தார். 

சர்வதேச டி20 போட்டியில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் 4-வது வீரர் என்ற சாதனை படைத்தார். 2000 ரன் மைல்கல்லை எட்ட கோலிக்கு, வெறும் 56 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது. இதன் மூலம், 66 இன்னிங்ஸில் இந்த இலக்கை எட்டிய நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லமை, கோலி முறியடித்தார். 

டி20ல் 2000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் மெக்கல்லம், குப்தில் (68 இன்னிங்ஸ்), ஷோயப் மாலிக் (92 இன்னிங்ஸ்) முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 

இந்த பட்டியலில் இணைய காத்திருக்கும் அடுத்த இந்திய வீரராக ரோஹித் சர்மா இருக்கிறார். அவருக்கு இன்னும் 19 ரன்கள் தேவையாக உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close