26 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த அயர்லாந்து பேட்ஸ்மேன்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 12:47 pm
ireland-s-26-yr-old-batsman-sean-terry-announces-retirement

அயர்லாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சென் டெர்ரி, தனது 26 வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் டெர்ரியின் மகன் சென் டெர்ரி (26). சௌதம்ப்டனில் பிறந்த இவர், அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தார். வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் யு-19 அணிக்காக விளையாடிய சென் டெர்ரி, அயர்லாந்துக்காக 5 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 

26 வயதே ஆன டெர்ரி, தன்னுடைய வாழ்க்கையில் புதிய பக்கத்தை துவக்க, இளம் வயதிலேயே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 

ஓய்வு குறித்து டெர்ரி கூறுகையில், "என்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வது என்பது கடுமையான மனதுடன் நான் எடுத்த முடிவு. அயர்லாந்து அணிக்காக விளையாடியது மிகவும் பெருமைக்குரியதாக பார்க்கிறேன். அயர்லாந்து அணிக்காக விளையாடித்தில் மகிழ்ச்சி" என்றார். 

19 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள டெர்ரி, 713 ரன் அடித்துள்ளார். 21 லிஸ்ட் ஏ போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார். தவிர உள்ளூர் போட்டியான கவுன்டியில் பங்கேற்கும் அணிகளான ஹாம்ப்ஷிர் மற்றும் நார்த்தம்ப்டன்ஷிருக்காகவும் டெர்ரி விளையாடி உள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close