ஜூலை 11 முதல் 3வது சீசன் டிஎன்பிஎல் தொடங்குகிறது

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 12:11 pm

tnpl-starts-from-july-11

தமிழக அளவில் நடக்கும் கிரிக்கெட் தொடரான டி.என்.பி.எல் வரும் ஜூலை மாதம் 11ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்கவிக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இதுவரை தூத்துக்குடியின் டூட்டி பேட்ரியாட்ஸ் மற்றும் சென்னையின் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன. ரசிகர்களிடம் கிடைத்த ஆதரவால் 3வது ஆண்டாக டிஎன்பிஎல் போட்டிகள் ஜூலை 11ந்தேதி தொடங்குகிறது.

இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டிபேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், சீசெம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 3வது டி.என்.பி.எல் சீசனுக்கான வீரர்கள் தேர்வு கடந்த மே மாதம் 31ம் தேதி நடந்தது. 

இந்நிலையில் 3வது சீசன் போட்டிகள் வரும் ஜூலை 11-ம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. திருநெல்வேலியில் நடைபெறும் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. 32 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 4 ஆட்டங்கள் சென்னையில் நடைபெற உள்ளன.

இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன. இந்த சீசனில் முதல்முறையாக பிற மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இருவர் ஒவ்வொரு அணியிலும் விளையாட உள்ளனர். இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்திய நட்சத்திர வீரர்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோரும் விளையாட இருப்பதால் இந்த தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close