தடையை மீறி இலங்கை அணியில் தினேஷ் சண்டிமல் சேர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 12:20 pm
dinesh-chandimal-named-in-sl-test-squad-against-south-africa

தடையை மீறி இலங்கை டெஸ்ட் அணியில் கேப்டன் தினேஷ் சண்டிமலை சேர்த்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, 12ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் 20ம் தேதி துவங்க உள்ளது. 

இத்தொடருக்கு முன்னதாக அண்மையில் இலங்கை, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இலங்கை, தொடரை சமன் செய்தது. இந்த தொடரின் 2-வது போட்டியில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமல், பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

அதனை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சண்டிமலுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் அவருக்கு பதில் சுரங்கா லக்மல் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கடைசி டெஸ்ட் போட்டிக்கு பிறகு, இலங்கை பயிற்சியாளர், மேலாளர் ஆகியோருடனான குற்றச்சாட்டில் சண்டிமலுக்கு மேலும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சண்டிமல் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவானது. 

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் கேப்டனாக மீண்டும் தினேஷ் சண்டிமல் இணைக்கப்பட்டு இருக்கிறார். சுரங்கா லக்மல், துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து பாதியில் விலகிய குறுகிய ஓவர் போட்டி கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ், காயத்தால் விலகிய குசல் பெரேரா, ரங்கனா ஹெராத் ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தொடருக்கு முன், 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை வாரியத் தலைவர் லெவன் அணியுடன், தென் ஆப்பிரிக்கா மோதுகிறது. 

இலங்கை டெஸ்ட் அணி: தினேஷ் சண்டிமல் (கேப்டன்), சுரங்கா லக்மல் (துணை கேப்டன்), ஏஞ்சலோ மேத்தியூஸ், திமுத் கருணரத்னே, குசல் மெண்டிஸ், தனுஸ்கா குணதிலகா, தனஞ்ஜய டி சில்வா, ரோஷன் சில்வா, நிரோஷான் டிக்வெல்லா, தில்ருவான் பெரேரா, அகில தனஞ்ஜய, லஹிரு குமரா, லக்ஷன் சண்டகன், கசுன் ரஜிதா, குசல் ஜனித்த பெரேரா, ரங்கனா ஹெராத்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close