கங்குலிக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சேவாக்

  Newstm News Desk   | Last Modified : 08 Jul, 2018 02:25 pm

sehwag-s-birthday-wish-to-ganguly

இன்று 44வது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலிக்கு முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் அவரது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கங்குலியை பற்றி 4 புகைப்படங்களுடன் 4 ஸ்டெப்களில் விளக்கி உள்ளார். கங்குலி பேட்டிங் செய்யும் புகைப்படம், கங்குலி அடித்த பந்து பார்வையாளர் மீது பட்டு அவர் தலையில் ரத்தம் வரும் புகைப்படம், பந்துவீசும்போது காற்றில் கலைந்த முடியுடன் இருக்கும் கங்குல் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் சட்டை கழட்டி சுழற்றிய புகைப்படத்துடன் சிறந்த மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். 

இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close