ரோஹித் செஞ்சுரி... தொடரை கைப்பற்றியது இந்தியா!

  Newstm News Desk   | Last Modified : 09 Jul, 2018 04:06 am

rohit-slams-a-ton-again-as-india-clinch-t20-series-against-england

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் இறுதி போட்டியில், ரோஹித் ஷர்மா அடித்த சதத்தால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஏற்கனவே ரெண்டு டி20 போட்டிகளில் விளையாடி 1-1 என இருந்த நிலையில், 3வது மற்றும் இறுதி போட்டியில் நேற்று விளையாடியது. இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த இங்கிலாந்து வீரர்கள் ராய் மற்றும் பட்லர், வெறும் 7.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் வந்த பட்லர்(34) மற்றும் ஹேல்ஸ்(30) நிதானமாக விளையாடினர். துவக்கத்தில் சொதப்பினாலும், இந்திய அணியின் பந்துவீச்சில் பின்னர் விக்கெட்கள் மளமளவென விழுந்தது. ஹர்டிக் பாண்டியா, சிறப்பாக பந்து வீசி, 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில்,9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. 

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் தவான் 5 ரன்களிலும்,  பின்னர் வந்த ராகுல் 19 ரன்களிலும் அவுட்டானார்கள். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து அருமையாக பேட் செய்த ரோஹித் ஷர்மா, 56 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் என விளாசி சதம் அடித்தார். கோலி பொறுமையாக ஆடி, 43 ரன்கள் சேர்த்தார். கடைசியாக, பவுலிங்கில் கலக்கிய பாண்டியா, ரோஹித்துடன் சேர்ந்து 33 ரன்கள் விளாச, இந்தியா 18.4 ஓவர்களில் வெறும் 3 விக்கெட் இழந்து 203 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியோடு, 1-1 என சமனான நிலையில் இருந்த டி20 தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close