ஒரு போட்டி, 2 உலக சாதனைகள்: கலக்கிய தல தோனி

  Newstm News Desk   | Last Modified : 09 Jul, 2018 09:13 am

ms-dhoni-creates-two-world-records-in-last-t20-against-english

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விக்கெட் கீப்பராக தோனி இரண்டு உலக சாதனைகளை செய்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரில் நேற்று கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இரண்டு அணிகளும் 1-1 என்று சம நிலையில் இருந்ததால் நேற்றைய போட்டியில் விறுவிறுப்பு அதிகமாகவே இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

8-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ஜேசன் ராய் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த 3 பேட்ஸ்மேன்களை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.இந்த 3 பேரின் விக்கெட் போவதற்கு தோனி பிடித்த கேட்ச் தான் காரணம்.

மேலும் சித்தார்த் கவுல் பந்தில் பிளங்கெட்டை  கேட்ச் பிடித்து வெளியேற்றினார். மொத்தம் இங்கிலாந்து இழந்த 9 விக்கெட்டில், 5 விக்கெட்டை கேட்ச் மூலமாகவும், ஒரு விக்கெட்டை ரன்அவுட் மூலமாகவும் தோனி வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு டி20 போட்டியில் 5 கேட்ச்கள் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

அத்துடன் டி20 போட்டியில் 54 பேரை கேட்ச் பிடித்து, டி20 போட்டியில் 50 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம் ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து அவர் அசத்தி உள்ளார். தோனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விக்கெட் கீப்பர் 34 கேட்ச்கள் மட்டுமே பிடித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close