ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முத்தரப்பு தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 11:17 am

pakistan-beats-australia-won-t20i-tri-series

முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான். 

ஹராரேவில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்று ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆஸி. அணியின் துவக்க வீரர்கள் டி அர்சி ஷார்ட் 76 ரன், ஆரோன் ஃபின்ச் 47 ரன்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 183 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா. 

இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான், துவக்க வீரர் ஃபாகார் ஜமானின் (91 ரன்) மற்றும் ஷோயப் மாலிக்கின் (43 ரன்) அதிரடி ஆட்டத்தால், 19.2 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்.

ஆட்ட-நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஃபாகார் ஜமான் தட்டிச் சென்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close