இது கொண்டாடுவதற்கான நேரம்: கோலியின் உற்சாக ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 05:08 pm

time-to-celebrate-virat-kohli-after-win-against-england

இது கொண்டாடுவதற்கான நேரம் என்று இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி ட்வீட் செய்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 என்று வென்றது. இதில் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் கோலி, "பவுலர்கள் ஆட்டத்தைத் திருப்பியது ஒரு கேப்டனாக மகிழ்ச்சியளிக்கிறது. விக்கெட் வீழ்த்தும் அந்தப் பந்துகளை வீசும் தரம் நம்மிடம் உள்ளது. அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். பாண்டியா நல்ல ஆல் ரவுண்ட் கிரிக்கெட்டர். தன்னம்பிக்கை மிக்கவர், அதுவும் அவர் அந்த விக்கெட்டுகளை வீழ்த்திய விதம் இளம் பந்து வீச்சாளர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது. பிறகு பேட்டிங்கிலும் விளாசினார், ரோஹித்தின் ஆட்டம்  நிச்சயம் சிறப்பான ஒன்று தான், ஆனால் ஹர்திக் பாண்டியா ஆட்டம் தனித்து நிற்கிறது. தொடரை வென்று அபாரமாகத் தொடங்கியுள்ளோம்" என்றார். 

பின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இத்தனை திறமையான சக வீரர்களுடன் விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது. இது கொண்டாடுவதற்கான நேரம்" என்று கோப்பையை வென்ற புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close