சர்வதேச டி20ல் 2000 ரன், 3 சதமடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா

  நந்தினி   | Last Modified : 09 Jul, 2018 01:26 pm

rohit-sharma-becomes-5th-player-to-reach-2000-t20-runs

சர்வதேச டி20 போட்டியில் 2000 ரன் இலக்கை அடைந்த 5-வது வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா. 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி பிரிஸ்டலில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய துவக்க வீரர் ரோஹித் சர்மா தனது மூன்றாவது டி20 சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம், மூன்று டி20 சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்தார். மேலும் சர்வதேச அளவில் மூன்று டி20 சதம் அடித்த நியூசிலாந்தின் கொலின் முன்றோவின் சாதனையையும் ரோஹித் சமன் செய்தார். 

இது தவிர, டி20 போட்டிகளில் 2000 ரன் மைல்கல்லை எட்டிய 5-வது வீரர் மற்றும் 2-வது இந்திய வீரர் என்ற பெயரையும் ரோஹித் பெற்றுள்ளார். மார்ட்டின் குப்தில் (2,271), பிரண்டன் மெக்கல்லம் (2,140), ஷோயப் மாலிக் (2,026), விராட் கோலி (2059) ஆகியோர் 2000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் நான்கு வீரர்கள் ஆவர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close