ஹர்மன்ப்ரீத் கவுரின் டிஎஸ்பி பதவி பறிப்போனது!

  Newstm News Desk   | Last Modified : 10 Jul, 2018 09:30 am

harmanpreet-loses-dsp-rank-over-fake-degree

போலிச் சான்றிதழ் வழங்கியதால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் டி.எஸ்.பி பதவியை ரத்து செய்தது பஞ்சாப் அரசு. 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர். இவருக்கு பஞ்சாப் அரசு காவல்துறையில் டிஎஸ்பி பதவி வழங்கியது. தற்போது அவர் இந்தப் பணியில் சேரந்த போது சமர்ப்பித்த பட்டப்படிப்புச் சான்றிதழ் போலியானது என்று காவல்துறை விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவரது பதவியை ரத்து செய்துள்ளது பஞ்சாப் அரசு. 

கடந்த மார்ச் 1ம் தேதி போலீஸ் டிஎஸ்பி பதவியில் இணைந்த ஹர்மன்ப்ரீத், மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டப்படிப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்திருக்கிறார். அது போலியானது என்று போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது. மேலும் அவர் 12ம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close