தோனி இந்திய கிரிக்கெட் அணியின் தூண்: புகழும் இர்ஃபான் பதான்!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 10:18 am

dhoni-is-pillar-of-indian-cricket-team-irfan-pathan

தோனி இந்திய அணியின் தூண் என கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டி உள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஜம்மூ காஷ்மீர் அணிக்காக உள்ளூர்போட்டிகளில் விளையாட இருக்கிறார் இர்ஃபான் பதான். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தோனி இந்திய அணியின் தூண் போல இருந்து வழிநடத்தி வருவதாக தெரிவித்தார்.  அவர் மைதானத்தில் இருக்கும் போதும், இல்லாவிட்டாலும் தோனி மென்டாராகவே இருக்கிறார். 

மேலும், "ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமான காலக்கட்டத்தில் வந்தவர்கள். எனவே அவர்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஒரு கேப்டனாக கங்குலி வித்தியாசமான முறையை கையாண்டார். அது பாராட்டத்தக்கதும் கூட. தோனியின் செயல்கள் நமக்கு கோப்பைகளை தந்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close