இன்று தொடங்குகிறது டிஎன்பிஎல்: அஸ்வின் களமிறங்குகிறார்

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 04:58 pm

tnpl-starts-from-today-dindigul-facing-trichy-in-first-match

திருநெல்வேலியில் இன்று தொடங்கும் டிஎன்பிஎல் முதல் போட்டியில் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோதுகின்றன. 

தமிழக கிரிக்கெட் வீரர்களை ஊக்கவிக்கும் வகையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து இந்த ஆண்டு டிஎன்பிஎல் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றது. 

இந்தாண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டிபேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், சீசெம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. 

திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி நட்சத்திரம் அஸ்வின் களமிறங்க இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  ஆட்டத்திற்கு முன்பாக தொடக்க விழா நடைபெற உள்ளது. 

மேலும்  டிஎன்பிஎல் போட்டியில் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதி அளிப்பது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close