குல்தீப் சுழல், ரோகித்தின் சதம்: சுருண்டது இங்கிலாந்து அணி

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 08:23 am

india-won-the-first-odi-against-england-by-8-wickets

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதன், முதல் போட்டில் நேற்று நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் பியர்ஸ்டா அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 73 ஆக இருந்த போது, ஜேசன் ராயை 38 ரன்களில் வெளியேற்றி சரிவுக்கு வித்திட்டார் குல்தீப் யாதவ்.

நடுவரிசையில் இறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இருவரும் அரைசதத்தை பதிவு செய்தனர். அடுத்தடுத்து, இவர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து மீண்டும் இங்கிலாந்தை ஆட்டம் காண செய்தார் குல்தீப். ஆட்டத்தில் ஒரு பந்து எஞ்சிய நிலையில், இங்கிலாந்து அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானும் 40 ரன்களில் ஆட்டமிழந்ததும், அடுத்த வந்த கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார்.

விராட் கோலி தனது பங்கிற்கு 75 ரன்கள் விளாசி ரன் உயர்வுக்கு வழிவகுத்தார். இந்தியா 40.1 ஓவரில், 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, 1-0 என்ற விகிதத்தில் இந்தியா தொடரில் முன்னிலை பெற்றது. ரோகித் 137 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதில், 6 விக்கெட் வீழ்த்தி 25 ரன்கள் மட்டும் கொடுத்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close