10 ஆயிரம் ரன்களை கடந்த தோனி! தல தலையில் இன்னோரு மகுடம்..

  Newstm Desk   | Last Modified : 15 Jul, 2018 11:58 am
dhoni-reaches-10000-runs-in-odi

ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து தோனி சாதனைப்பைடத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா நேற்று விளையாடியது. இதில் தோனி இந்த சாதனையை செய்துள்ளார். சர்வதேச அளவில் ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 12வது வீரர் என்ற பெருமை தோனியின் சாதனை பட்டியலில் நேற்று இணைந்து கொண்டது. அந்த போட்டியில் தோனி 37ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இந்திய அளவில் சச்சின், ராகுல் திராவிட், கங்குலி ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.தோனி இதுவரை 319 போட்டிகளில் விளையாடி 10 சதம், 67 அரைசதங்களுடன் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். 

அதுமட்டும் அல்லாமல் விக்கெட் கீப்பராக இலங்கையில் சங்ககாராவுக்கு பிறகு தோனியே இச்சாதனையை செய்துள்ளார். 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பெரும்பாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகவே இருந்துள்ளனர். ஆனால் தோனி 6வது இடத்தில் களமிறங்கி இச்சாதனையை செய்துள்ளது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேலும், இதே போட்டியில் தனது 300வது கேட்சை பிடித்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 300வது கேட்ச் பிடித்த நான்காவது விக்கெட்கீப்பர் எனும் சாதனையும், 300 கேட்ச் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார்.

அதிககேட்ச் பிடித்த பட்டியலில் ஆஸி வீரர் கில்கிறிஸ்ட் 417 கேட்ச்களை பிடித்து முதலிடத்தில் உள்ளார். இந்திய கேப்டனான விராட் கோலியும் இவ்வரிசையில் விரைவில் இணையவுள்ளார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close