4-வது போட்டி: 244 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது பாகிஸ்தான்

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2018 04:53 pm
4th-odi-pakistan-beat-zimbabwe-by-244-runs

ஜிம்பாப்வேக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில், 3-0 என தொடரை பாகிஸ்தான் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில், நேற்று 4-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தானின் ரன் மழையை, ஜிம்பாப்வேவால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் 50 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து பாகிஸ்தான் 399 ரன் குவித்தது. 400 என்கிற இமாலய வெற்றி இலக்கை கொண்டு களமிறங்கிய ஜிம்பாப்வே, 155 ரன்னில் சுருண்டது. இதனால் 244 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-0 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.   

இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நாளை (22ம் தேதி) நடக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close