டிஎன்பிஎல்: சேப்பாக்கத்தில் காரைக்குடியிடம் வீழ்ந்தது சென்னை

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2018 09:19 am
tnpl-karaikudi-kaalai-beat-chennai-by-47-runs

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணியை காரைக்குடி அணி வீழ்த்தியது. 

டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் மோதின. டாஸ் வென்ற காரைக்குடி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்திருந்தது. 

பின்னர் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் அணியை காரைக்குடி அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. காரைக்குடி அணியின் கேப்டன் அனிருதா ஶ்ரீகாந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 28 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close