விராட் கோலிக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது

  நந்தினி   | Last Modified : 26 Jul, 2018 01:04 pm
virat-kohli-receives-international-player-of-the-year-award-from-barmy-army

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வழங்கியது பர்மி ஆர்மி. 

இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் முதல் தொடங்க இருக்கிறது. இதனால் தொடரில் சிறப்பாக செயல்படவும், அணியை வெற்றிக்கான பாதையில் வழி நடத்தவும் கேப்டன் கோலி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 

கடந்த 10 ஆண்டுகளாக தேசிய அணியில் இடம் பிடித்து, தற்போது கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கோலி. இவர் பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது பர்மி ஆர்மியிடம் இருந்து, 2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற விருதை கோலி பெற்றிருப்பது ஸ்பெஷலாக அமைந்துள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்காக தொடங்கப்பட்ட, அரை-ஒழுங்கமைக்கப்பட்ட குழு தான் 'பர்மி ஆர்மி'. இந்த குழு, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. தற்போது இந்த ஆர்மிக்கென்றே, இங்கிலாந்தின் பல கிரிக்கெட் மைதானங்களில் தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. 

 

 

பர்மி ஆர்மியிடம் இருந்து கோலிக்கு விருது வழங்கப்பட்ட தகவலை, பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close