அப்படியே போடு மாமா : அஸ்வினை தமிழில் உற்சாகப்படுத்திய தினேஷ் கார்த்திக்!

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 10:02 am
dinesh-karthik-encourages-ashwin-in-tamil

இங்கிலாந்தில், தினேஷ் கார்த்திக் தமிழில், பேசி பந்துவீசும் அஸ்வினை உற்சாகப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. பின்னர் ஒரு நாள் போட்டியில் சுதாரித்துக்கொண்ட இங்கிலாந்து அணி, இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது.

இந்நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸை வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் மற்றும் ஆர். அஸ்வின் என மூன்று தமிழக வீரர்கள் உள்ளனர்.

முதல் நாள் போட்டியில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி இருந்தார். ஆட்டத்தின் 17வது ஓவரில் அஸ்வின் பந்துவீசினார். அது அவரது 7வது ஓவர். அப்போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அஸ்வினை தமிழில் பேசி உற்சாகப்படுத்தினார். 

 

 


அவர், "டேய், டேய்... வேற மாதிரி டா நீ, போட்றா போட்றா மாமா, தூக்கிடலாம்", "நல்லா இருக்கு அஸ்வின், நல்லா இருக்கு", "போடு மாமா, போடு மாமா, அடுத்த மூணு பந்தையும் அதே இடத்ல போடு, என்ன பண்றான்னு பாக்கலாம்" என்றெல்லாம் தினேஷ் கார்த்திக் பேச அது ஸ்டம்ப்பில் இருந்த மைக்கில் பதிவாகியது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close