முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 287 ரன் எடுத்து ஆட்டமிழந்தது

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 03:57 pm
ind-vs-eng-1st-test-england-all-out-for-287-runs-in-first-innings

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழந்து 285 ரன் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 80 ரன், ஜானி பேர்ஸ்டோவ் 70 ரன் அடித்தனர். அஷ்வின் 4, ஷமி 2, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜேம்ஸ் ஆண்டர்சன் (0), சாம் கர்ரான் 24 ரன்னுடன் களத்தில் நின்றிருந்த நிலையில், ஆண்டர்சன் 2 ரன் அடித்தார். பின், ஷமியின் பந்தை எதிர்கொண்ட சாம் கர்ரான், கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் 287 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்டானது. 

இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை துவங்கியுள்ளது. முரளி விஜய் - ஷிகர் தவான் துவக்க வீரர்களாக களமிறங்கி உள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close