4-வது ஒருநாள் போட்டி: தெ.ஆ-வை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2018 12:41 pm
4th-odi-sri-lanka-beat-south-africa-by-3-runs

நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை. டக்வர்த் லூயிஸ் முறைப்படி 3 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்றது இலங்கை அணி. 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா, ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.  ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், தென் ஆப்பிரிக்கா 3-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. 

நேற்று இரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி பல்லேகேலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா, பந்துவீச முடிவு செய்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் 39 ஓவராக குறைக்கப்பட்டது. 

39 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன் எடுத்தது. இதன் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி விளையாடி வந்தது. 21 ஓவரில் தெ.ஆ., 9 விக்கெட் இழந்து 187 ரன் எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி, வருகிற 12ம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது.

இதையும் படிச்சிருங்க

டி.என்.பி.எல்: முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் இன்று நடக்கின்றன

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close