டி.என்.பி.எல்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல் அணி

  Newstm News Desk   | Last Modified : 10 Aug, 2018 11:23 am

dindigul-qualified-for-tnpl-finals

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேறியது.

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான குவாலிஃபையர்-1 போட்டியில், திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது மதுரை அணி. இதனையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஹரி நிஷாந்த் 57 ரன்களும், விவேக் 54 ரன்கள் எடுத்திருந்தனர். 

அடுத்ததாக களமிறங்கிய மதுரை அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்னில் சுருண்டது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இதனைத்தொடர்ந்து நடந்த எலிமினேட்டர் சுற்று போட்டியில், காரைக்குடி மற்றும் கோவை அணிகள் மோதின. 

டாஸ் வென்ற காரைக்குடி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கோவை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய காரைக்குடி அணியால் 20 ஓவர்களில் 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கோவை அணி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. 

இந்த அணி இன்று நடைபெற உள்ள குவாலிஃபையர்-2 சுற்றில் மதரை அணியை எதிர்த்து விளையாடுகிறது. 

newstm.in

Advertisement:
[X] Close