தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியை வென்றது இலங்கை

  Newstm Desk   | Last Modified : 15 Aug, 2018 11:25 am
sl-vs-sa-only-t20i-sl-won-by-3-wkts

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா, மூன்றுவிதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்றது. இதில் டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை மளமளவென பறிகொடுத்து தடுமாறியது தென் ஆப்பிரிக்கா. இதனால் 16.4 ஓவரில் தென் ஆப்பிரிக்கா, 98 ரன்னுக்கு சுருண்டது. 

இலங்கையின் லக்ஷன் சண்டகன் 3, தனஞ்ஜய டி சில்வா மற்றும் அகில தனஞ்ஜய 2 விக்கெட் வீழ்த்தினர். 

99 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 16 ஓவரில் போட்டியை வென்று, கோப்பையை தட்டிச் சென்றது. அதிகபட்சமாக சண்டிமல் 36, தனஞ்ஜய 31 ரன்கள் எடுத்தனர். தனஞ்ஜய டி சில்வா ஆட்ட-நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close