3-வது டெஸ்ட்: ஆடும் லெவனில் பென் ஸ்டோக்ஸ் சேர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2018 12:45 pm
ben-stokes-included-in-playing-xi-team-for-3rd-test

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆடும் லெவன் அணியில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இணைக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்த சாம் கர்ரான் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று ட்ரென்ட் பிரிட்ஜில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது. இதனால் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து களமிறங்கும். அதே சமயம் தொடரை இழக்காமல் போட்டியில் வெற்றி பெற இந்தியா முயற்சிக்கும். 

தன் மீதான வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து, இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை தவறவிட்ட ஸ்டோக்ஸ், 3-வது டெஸ்ட் அணியில் இங்கிலாந்து வீரர்களுடன் இணைந்தார். ஆனால் ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது என்று கேப்டன் ஜோ ரூட் குழப்பத்தில் இருந்தார். 

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் மற்றும் 5 விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்த 20 வயதான சாம் கர்ரானை, ஆடும் லெவனில் இருந்து ரூட் நீக்கிவிட்டு ஸ்டோக்ஸை சேர்த்துள்ளார். ஸ்டோக்ஸுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட வோக்ஸ் தான் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்ரான் வெளியேற்றப்பட்டார்.

2-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த கிறிஸ் வோக்ஸ், இந்த ஆட்டத்திலும் தனது அதிரடியை தொடர இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமான ஒல்லி போப்பும் அணியில் இடம் பெற்றுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close