4 டெஸ்ட் போட்டிகள், இரண்டு முறை 5 விக்கெட்டுகள்: கலக்கும் பும்ரா

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2018 02:01 pm
jasprit-bumrah-has-taken-two-five-wicket-hauls-in-his-first-four-tests

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிரெண்ட் பிரிட்ஜில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய அணி தற்போது வெற்றி பெற உள்ளதால் இந்திய அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

நடப்பு 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளான நேற்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதில் முதல் 4 விக்கெட்டுகள் 62 ரன்கள் எடுத்த போதே அந்த அணி இழந்தது. ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக் மற்றும் ஜோஸ் பட்லர் இணை மிக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். பட்லர் டெஸ்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த இணை, பட்லர் 106 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா விக்கெட் எடுத்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. 

 

 

இதனைத் தொடர்ந்து இந்திய பவுலர் பும்ரா வரிசையாக பென் ஸ்டொக்ஸ், பாரிஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், பிராட் என விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் வெற்றி மிக அருகில் வந்துள்ளது. ஆடில் ரசித் பேட்டிங் செய்த போது பும்ரா அவரது விக்கெட்டையும் எடுத்தார். இருப்பினும் அது நோ-பாலாக போனது. 

இதே ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின் மூலம் டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா அறிமுகமானார். அந்த தொடரிலேயே அவர் ஒரு போட்டியில் 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். இந்நிலையில் தற்போது இந்த போட்டியிலும் 5 விக்கெட்கள் எடுத்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close