4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2018 05:08 pm
england-test-squad-announced-for-4th-test-against-india

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற 30ம் தேதி சௌதாம்ப்டனில் துவங்க இருக்கிறது. 

ஏற்கனவே கடைசி இரு போட்டிகளுக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

அணியில் காயத்தில் இருக்கும் ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்று வீரராக களமிறங்க ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார். 

இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டுவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலாஸ்டர் குக், சாம் கர்ரான், கேட்டான் ஜென்னிங்ஸ், ஒல்லி போப், அதில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close