யு-19 உலக கோப்பைக்கு முதல்முறையாக நைஜீரியா தகுதி

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2018 04:53 pm
nigeria-qualify-for-icc-u-19-world-cup

தன்சனியா அணியை வீழ்த்தி யு-19 உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது ஜூனியர் நைஜீரியா கிரிக்கெட் அணி.

2020ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் யு-19 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச் சுற்று போட்டி தென் ஆப்பிரிக்காவின் போட்சேபிஸ்ட்ரூமில் நடந்தது. இதில் நைஜீரியா - தன்சானியா அணிகள் மோதிய ஆட்டத்தில், 35 ரன் வித்தியாசத்தில் நைஜீரியா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு நைஜீரியா தகுதி அடைந்துள்ளது. 

முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா, 9 விக்கெட் இழந்து 109 ரன் எடுத்தது. இதன் பின் களமிறங்கிய தன்சனியா 134 ரன்களுக்கு சுருண்டது. 

இந்த வெற்றி குறித்து நைஜீரியா கிரிக்கெட் துணை தலைவர் உயி அக்படா கூறுகையில், "வீரர்களின் இந்த சாதனையை கண்டு நைஜீரியா கிரிக்கெட் பெருமை கொள்கிறது. இந்த பயணம் அவர்களுக்கு மிகவும் கடினம். இருப்பினும் அவர்கள் அதனை ஒழுக்கமாகவும், அர்ப்பணிப்புடனும் கடந்து வந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் சீனியர் அணியில் முக்கிய புள்ளியாக இருப்பார்கள்" என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close