உலக சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது

  Newstm Desk   | Last Modified : 07 Sep, 2018 01:25 pm
indian-women-junior-team-shooters-won-gold-in-issf-world-championship

ஹசாரிக்காவை தொடர்ந்து உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. 

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஜூனியர் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக ஆடவர் பிரிவில் 16 வயதான ஹரிதாய் 250.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதை தொடர்ந்து நடந்த மகளிருக்கான 10மீ ஏர் ரைஃபிள் குழு பிரிவு போட்டியில், இளவேனில் வலறிவான் (631 புள்ளிகள்), ஸ்ரேயா அகர்வால் (628.5), மணினி கௌஷிக் (621.2) அடங்கிய இந்திய அணி, ஒட்டுமொத்தமாக 1880.7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. 

ஆடவர் குழு பிரிவில், ஹசாரிக்கா ஹரிதாய், திவ்யன்ஷ் பன்வர், அர்ஜுன் பாபுதா அடங்கிய அணி 1872.3 புள்ளிகள் பெற்று, நான்காவது இடத்தை பிடித்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close