5வது டெஸ்ட்: 58/3; தடுமாறும் இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 06:08 am
indian-top-order-collapses-58-3

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணி 58 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து 405 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என ஏற்கனவே கைப்பற்றிவிட்ட இங்கிலாந்து, கடைசி போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் எடுக்க, இந்தியா, 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில், ஓய்வுபெறும் இங்கிலாந்து வீரர் ஆலஸ்டர் குக் சதம் அடித்து அசத்தினார். கடைசி சர்வதேச போட்டியில் அவர் 147 ரன்கள் அடிக்க, ரூட் 125 ரன்கள் விளாசினார். 8 விக்கெட்கள் இழந்து 423 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. 

464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆண்டர்சன் வீசிய இரண்டாவது ஓவரில், துவக்க வீரர் தவான், 1 ரன்னிலும், புஜாரா டக் அவுட்டும் ஆனார்கள். அடுத்த ஓவரிலேயே, பிராடின் பந்தில் கேப்டன் கோலியும் டக் அவுட் ஆக, 2 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தவித்தது இந்தியா. கே.எல் ராகுல் (46), ரஹானே (10) ஜோடி நிதானமாக விளையாடி சரிவில் இருந்து இந்தியாவை மீட்டது. 58 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close