ஆசிய கோப்பை: உலகே காத்திருக்கும் இந்தியா VS பாகிஸ்தான்!

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2018 10:14 pm

asia-cup-india-vs-pakistan-preview

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் துவங்குகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் இந்த் தொடரின் முதல் போட்டியில், இலங்கையுடன் வங்கதேசம் மோதுகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஹாங் காங்குடன் மோதுகிறது. இரண்டாவது போட்டியில் இந்தியா, பரம எதிரிகளான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

2018 ஆசிய கோப்பையிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இதுதான். 19ம் தேதி நடைபெறும், இந்த போட்டியில், இரு அணிகளும் எதிர்கொள்ளவுள்ள பலங்கள், பலவீனங்கள் குறித்து பார்க்கலாம். 

வெற்றி கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி இந்தியாவுக்கு, மிகப்பெரிய இழப்பு. ஆனால், அவரது இடத்தில் அணியை தலைமை தாங்கும் ரோஹித் ஷர்மா ஒன்றும் சளைத்தவரில்லை. எதிரணி பந்துவீச்சாளர்களை கதறவிடும் திறமை கொண்டவர். கேப்டன்ஷிப்பிலும் ரோஹித் பல சாதனைகளை புரிந்துள்ளார். மேலும், தோனியும் ரோஹித்துக்கு பக்க பலமாக இருப்பார். துவக்க பார்ட்னர்ஷிப் ரோஹித் - தவான் ஜோடி. நீண்ட அனுபவமும் ஒற்றுமையும் கொண்ட இந்த ஜோடி, நிச்சயம் நல்ல துவக்கம் தருவார்கள் என எதிர்பார்க்கலாம். தொடர்ந்து, தினேஷ் கார்த்திக், கே.எல் ராகுல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் தங்களது சிறந்த பார்மை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். பேட்டிங் பகுதியில் இந்திய அணிக்கு பிரச்னை இருக்காது. பவுலிங்கில் சுழற்பந்து வீச்சாளர்கள் சஹால், குல்தீப் யாதவ் ஆகியோரின் மீது அனைவரது கண்ணும் இருக்கும்.

எல்லா பக்கமும் அதிரடி வீரர்களை கொண்டுள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கும் கோப்பைக்கும் இடையே மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிரடி பேட்ஸ்மேன்கள் பாபர் அசாம், ஃபக்கர் ஸமான், ஷோயப் மாலிக் ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளனர். ஜிம்பாபவேக்கு எதிராக 3 சதங்கள் அடித்து பட்டையை கிளப்பிய இளம் வீரர் இமாம் உல் ஹக், இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆர்வமாக இருப்பார். இப்படி பலமான பேட்ஸ்மேன்கள் ஒரு புறம் இருந்தாலும், பாகிஸ்தானின் மிகப்பெரிய பலம் பேட்டிங் கிடையாது. ஆசிய கோப்பையில் விளையாடும் அணிகளிலேயே சிறந்த பவுலர்களை கொண்டுள்ளது பாகிஸ்தான் தான் என கிரிக்கெட் ஆர்வலர்கள் அடித்து கூறுகின்றனர். ஹசான் அலி, முஹம்மது ஆமீர், ஷாஹீன் அஃப்ரிடி என சூப்பர் பார்மில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களை, இந்திய வீரர்கள் ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும். 

கோலியின் நம்பகத்தன்மை அணியில் இல்லாததால், இந்தியா சேசிங் செய்வதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எது எப்படியோ, இந்த போட்டி நிச்சயம் கிரிக்கெட் உலகின் மொத்த கவனத்தையும் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.