ஆசிய கோப்பை: தனுஸ்கா குணதிலகா விலகல்

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 04:09 pm

danushka-gunathilaka-out-of-asia-cup-2018

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து இலங்கையின் துவக்க வீரர் தனுஸ்கா குணதிலகா விலகினார். இதனால் அவர் யுஏஇ-ல் இருந்து நாடு திரும்ப இருக்கிறார். 

ஆசிய கோப்பை 2018, யுஏஇ-ல் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் இலங்கையின் துவக்க வீரர் தனுஸ்கா குணதிலகா, முதுகு காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால்  யுஏஇ-ல் இருந்து நாடு திரும்ப இருக்கிறார் குணதிலகா. அவருக்கு பதில் ஷெஹான் ஜெயசூரியா, அணியுடன் இணைய யுஏஇ-க்கு பறக்க உள்ளார். 

முன்னதாக தென் ஆப்பிரிக்கா தொடரின் போது, நள்ளிரவு தன்னுடன் விருந்தாளியை தங்க வைத்ததற்காக குணதிலகாவிற்கு ஆறு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

குணதிலகாவுக்கு முன், டெஸ்ட் கேப்டன் தினேஷ் சண்டிமல் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகி இருந்தார். இதனால் நிரோஷன் டிக்வெல்லா அணியில் சேர்க்கப்பட்டார். நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் துவக்க போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close