1984 - 2016 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி சாம்பியன்ஸ் யாரெல்லாம் தெரியுமா?

  முத்துமாரி   | Last Modified : 14 Sep, 2018 05:51 pm

asia-cup-champions-from-1984-to-2016

1986ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி விபரங்கள்:-

1984ம் ஆண்டு ரோத்மன்ஸ் ஆசியக் கோப்பை போட்டி இறுதிப்போட்டி ஐக்கிய அரபு எமீரக நாட்டின் சார்ஜா நகரில் நடைபெற்றது. இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இந்தியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் ஆசியக்கோப்பையை கைப்பற்றியது.

1986ம் ஆண்டு 'ஜான் பிளேயர் கோல்ட் ட்ராபி' என்ற பெயரில் ஆசியக் கோப்பை போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. இதில் இலங்கை அணியும், பாகிஸ்தான் அணியும் ஒன்றையொன்று எதிர்கொண்டன. ஆட்ட இறுதியில், இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றியது. 

1988ம் ஆண்டு வில்ஸ் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்றது. இதில், இந்திய, இலங்கை அணிகள் மோதிய நிலையில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

1991ல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இலங்கையுடன் மோதி இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் 95 பந்துகளில் 75 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 

1995ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

1997ம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா -இலங்கை மோதின. இலங்கையின் கொழும்பு நகரில் இந்த போட்டியானது நடைபெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

2000ல் டாக்காவில் நடந்த ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின.  பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. 

2004ம் ஆண்டு கொழும்பு நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட இலங்கை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 

2008ம் ஆண்டு ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்றது. இதிலும், இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இலங்கை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. 

2010ம் ஆண்டு இலங்கையின் தம்புல்லா நகரில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா- இலங்கை அணிகள் மோதின. கடந்த இரண்டு முறை தோல்வியை தழுவிய இந்திய அணி, இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

2012ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்று கோப்பையை கைப்பற்றியது. 

2014ல் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி டாக்காவில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

2016ம் ஆண்டு டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியாவும், பங்களாதேஷும் மோதின. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 

2018ம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பை போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்க இருக்கின்றன. இதில், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் மோத இருக்கின்றன. இதன் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.