ஆசிய கோப்பை முதல் போட்டியில் வென்றது வங்கதேசம்

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2018 10:12 am
bangladesh-win-by-137-runs-vs-lanka

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டத்தில் வங்கதேசம் 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

14வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. துபாயில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், மற்றொரு தொடக்க வீரர் லிட்டான் தாஸ் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். 3வது வீரராக களம் இறங்கிய சாஹிப் அல் ஹசன், மலிங்கா பந்துவீச்சில் டக் அவுட் ஆன நிலையில், வங்கதேச அணி தவித்தது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம் மற்றும் முகம்மது மிதுன் இணை 3-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தது. 150 பந்துகளை சந்தித்த முஷ்பிகுர் ரஹீம் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 144 ரன்களை குவித்தார். முகம்மது மிதுன் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 49.3 ஓவர்களில் 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில், நெடுநாட்களுக்குப் பிறகு களம் கண்ட மலிங்கா 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இவரது பந்துவீச்சில் சிக்கத் தவித்த வங்கதேசம் 10 ஓவர்கள் முடிவில் வெறும் 22-3 என்ற மோசமான நிலையில் இருந்தது.

தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. எந்த வீரரும் 30 ரன்களை தாண்டவில்லை. தில்ரூவன் பெரைரா அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 35.2 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேசம் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சார்பில், கேப்டன் மொர்டாசா, முஜ்தபிஜூர் ரகுமான், மெஹிதி ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

சிறப்பாக பேட்டிங் செய்த முஷ்பிகுர் ரஹீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close