ஸ்ம்ரிதி மந்தனா, ரோஹன் போபண்ணா உள்பட 20 பேர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2018 11:22 am
neeraj-chopra-smriti-mandhana-among-20-athletes-recommended-for-arjuna-award

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க நேற்று விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இவர்களை தவிர நீரஜ் சோப்ரா, ஸ்மிரிதி மந்தனா உள்பட 20 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு விளையாட்டுக்கான உயரிய விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் விளையாட்டுத் துறையும் சிறப்பாக செயல்பட்ட வீரர்-வீராங்கனைகள் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும். 

அவ்வாறு நேற்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விளையாட்டுத் துறை பரிந்துரை செய்தது. 

இதன் பிறகு, விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராதோர், அர்ஜுனா விருதுக்கு 20 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். காமன்வெல்த் மற்றும் ஏசியன் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஏசியன் தடகள போட்டியில் 2 வெள்ளி, ஒரு தங்கம் வென்ற ஹிமா தாஸ், தங்கம் மற்றும் வெள்ளி வென்ற ஜின்சன் ஜான்சன், டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற ரோஹன் போபண்ணா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா உள்ளிட்டோரும் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

பரிந்துரைக்கப்பட்டவர்கள்:

நீரஜ் சோப்ரா (தடகளம்); ஜின்சன் ஜான்சன் (தடகளம்), ஹிமா தாஸ் (தடகளம்); சிக்கி ரெட்டி (பேட்மின்டன்); சதிஷ் குமார் (குத்துச்சண்டை); ஸ்மிரிதி மந்தனா (கிரிக்கெட்); ஷுபன்கர் சர்மா (கோல்ப்); மன்ப்ரீத் சிங் (ஹாக்கி); சவிதா (ஹாக்கி); ரவி ராதோர் (போலோ); ராஹி சார்னோபாத் (துப்பாக்கிச் சுடுதல்); அன்குர் மிட்டல் (துப்பாக்கிச் சுடுதல்); ஷ்ரேயாஷி சிங் (துப்பாக்கிச் சுடுதல்); மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்); சத்யன் (டேபிள் டென்னிஸ்); ரோஹன் போபண்ணா (டென்னிஸ்); சுமித் (மல்யுத்தம்); பூஜா கடியேன் (வ்யூஷு); அன்குர் தாமா (பாரா- தடகளம்); மனோஜ் சர்க்கார் (பாரா- பேட்மின்டன்).

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close