டாஸ் வென்றது பாக்; இந்திய அணியில் பாண்டியா, பும்ரா!

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2018 05:07 pm
asia-cup-ind-vs-pak-pakistan-opt-to-bat

ஆசிய கோப்பை 5-வது லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்றுள்ளது.

14-வது ஆசிய கோப்பை போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. 

இந்திய அணியில் காலில், ஷர்துல் நீக்கப்பட்டுள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். 

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), தவான், ராயுடு,தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, சாஹல். 

பாகிஸ்தான்: பாக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், ஷோயிப் மாலிக், சர்ப்ராஸ் அஹ்மத் (கேப்டன்), ஆசிப் அலி, பாஹீம் அஷ்ரப், முகமது அமிர், ஹசன் அலி, உஸ்மான் கான்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close