பவுலிங் பண்ணு... இல்லைனா பவுலரை மாற்றுவேன்: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட தோனி!

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 11:59 am
bowling-karega-ya-bowler-change-karein-ms-dhoni-to-kuldeep

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங்கை மாற்ற சொன்ன குல்தீப் யாதவிடம்,"பவுலிங் பண்ணு இல்லைனா பவுலரை மாற்றுவேன்" என கேப்டன் தோனி கோபமாக பேசினார். 

2018ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர் 4 சுற்று நடந்து வருகிறது. இதில் நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி சமனில் முடிந்தது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது நேற்றைய கேப்டன் தோனியிடம் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஃபீல்டிங்கை மாற்ற வேண்டும் என்று கூறினார். 

அதனை பொருட்படுத்தாத தோனி, "பவுலிங் பண்ணு இல்லைனா பவுலரை மாற்றி விடுவேன்" என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னர் இதே போல தோனி தன்னிடம் கோபப்பட்டது குறித்து குல்தீப் யாதவ் நினைவு கூர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close