ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியை தேர்வு செய்தது யார்: கங்குலி கேள்வி

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 11:00 am
ganguly-wants-to-know-who-between-rohit-sharma-and-ravi-shastri-picks-the-team

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்தது யார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பி உள்ளார்.

2018ம் ஆண்டுக்காக ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடந்து வருகின்றன். இந்த தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. இதில் இந்தியா  மற்றும் ஆப்கானிஸ்தான் விளையாடிய போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டார். 

மேலும் அன்றைய தினம் ஆடிய இந்திய அணியில் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அந்த போட்டி டிராவில் முடிந்தது. 

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கேப்டன் கங்குலி, "இந்திய அணி வீரர்களை யார் தேர்வு செய்கின்றனர். ரோகித் சர்மாவா? அல்லது ரவி சாஸ்திரியா?... சூப்பர் 4 சுற்றில் தோனி தான் கேப்டன் என்றால், அவர் தான் அணியை தேர்வு செய்திருக்க வேண்டும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close