தோனிக்கு பதில் ரிஷப் பன்ட்? தேர்வுக்குழுவின் முடிவு...

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2018 07:07 pm

rishabh-pant-to-replace-dhoni

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக ரிஷப் பன்ட் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பார்மை வெளிப்படுத்திய பின், ஒரு நாள் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால், அவரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்க வாய்ப்பு கம்மி என தகவல்கள் வெளியானது. சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் ரிஷப் பன்ட், தோனிக்கு பதில் அணியில் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது தோனி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாளை ஒருநாள் அணியை தேர்வு செய்ய, எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு ஒன்று கூடுகிறது. ஒருநாள் தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். அதேபோல. தோனிக்கு அடுத்து ஒரு நம்பகமான பேட்ஸ்மேன் வேண்டும் என தேர்வுக்குழு கருதுவதாக தெரிகிறது. ஒருபுறம், தோனிக்கு பதில் பன்ட் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்பட்டாலும், இருவரும் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தோனிக்கு அடுத்து, 6வது அல்லது 7வது இடத்தில் பன்ட் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாம்.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close