இரண்டாவது டெஸ்டிலும் மயங்க் அகர்வாலுக்கு முழுக்கு!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 04:21 pm

mayank-agarwal-not-included-in-2nd-test-team

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நல்ல பார்மில் இருக்கும் மயங்க் அகர்வால் தேர்ந்தெடுக்கப்படாதது, ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி எஞ்சியுள்ள நிலையில், வாய்ப்பளிக்கப்படாத இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சதமடித்த இளம் வீரர் ப்ரித்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளது அனைவருமே எதிர்பார்த்தது தான் என்றாலும், டக் அவுட்டான ராகுலுக்கு பதில் அகர்வால் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு உள்நாட்டு போட்டிகளில் 2000 ரன்களுக்கு மேல் அடித்து சூப்பர் பார்மில் உள்ள அகர்வாலுக்கு இன்னும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல, கடந்த 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 2 முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ள ரஹானேவுக்கு ஓய்வளித்துவிட்டு, அவருக்கு பதில் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் டெஸ்டில் விளையாடிய அதே அணியில், பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் 12வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் போவது தவறான முடிவு என சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close