2வது டி10 தொடர்: நவம்பர் 21ம் தேதி தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 08:37 am
uae-to-host-2nd-t10-league-next-month

இரண்டாவது டி10 தொடர் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 21ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை கூட்ட டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதையும் குறைத்து டி10 போட்டி வரும் நவம்பர் 21ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

சார்ஜா மைதானத்தில் இந்த டி10  கிரிக்கெட் போட்டி நடைப்பெற உள்ளது. கடந்தாண்டே இந்த டி10 தொடர் நடைப்பெற்றாலும், தற்போது ஐசிசியும் இந்த தொடருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் முன்னனி வீரர்கள் சிலர் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர்.

கடந்தாண்டு வெறும் 4 நாட்கள் நடந்த இந்த தொடர், தற்போது லீக், ரவுண்ட் ராபின் முறை என ஐசிசி விதிமுறைகளின் படி நடக்கவிருக்கிறது

இந்த தொடரில் மராதா அரேபின், பாக்தூன், பஞ்சாப் லெஜண்ட்ஸ், கேரளா கிங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கராச்சியர், ராஜ்புட், வடக்கு வாரியர்ஸ், பாக்குனோன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மேலும் முன்னனி வீரர்களான விரேந்தர் சேவாக், சுனில் நாரைன், அஃப்ரிடி, ரஷீத் கான், ஈயோன் மோர்கன் உள்ளிடோர் கலந்து கொள்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close