விஜய் ஹசாரே டிராபி: கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி

  டேவிட்   | Last Modified : 21 Oct, 2018 01:12 am

mumbai-won-vijay-hazare-trophy

விஜய் ஹசாரே டிராபியின் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்,பெங்களூருவில் நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின.

டாஸ் ஜெயித்த மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, டெல்லி அணி களமிறங்கியது. ஹிம்மத் சிங் 41 ரன்களும், துருவ் ஷோரே 31 ரன்களும், சுபோத் பாதி 25 ரன்களும், பவன் நெகி 21 ரன்களும் எடுத்தனர். இறுதியில், டெல்லி அணி 45.4 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மும்பை அணி சார்பில் தவால் குல்கர்னி, ஷிவம் துபே 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி ஆடியது.

டெல்லி அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி. அதன்பின் ஜோடி சேர்ந்த சித்தேஷ் லால் மற்றும் ஆதித்யா தரே ஆகியோர் 100 ரன்கள் ஜோடி சேர்த்தனர்.

இறுதியில், மும்பை அணி 35 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், விஜய் ஹசரே கோப்பையையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஆதித்ய தரே தேர்வு செய்யப்பட்டார்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close