மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2018 06:20 pm
west-indies-322-8

கவுகாத்தியில் இன்று நடைபெற்று வரும்  இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியா அணி 322 ரன்கள் குவித்தது. ஷிம்ராம் ஹெட்மையர் சதம் அடித்து அசத்தினார். 

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி கவுகாத்தியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் துவங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.  தொடக்க வீரராக களமிறங்கிய கிரண் பவுள் 51(39) ரன்கள் என அணிக்கு பலம் சேர்த்தார். இவரை தொடர்ந்து வந்த ஷாய் ஹோப் 32(51), ஷிம்ராம் ஹெட்மையர் 106(78) என அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

 

 

இதன் காரணமாக மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் மட்டும் இழந்து 322 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட், மொகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா தலை 2 விக்கெட், கலீல் அகமது 1 விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது. 

 

 

முன்னதாக இந்த போட்டியின் மூலம் ரிஷப் பன்ட் ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். அவருக்கு  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொப்பி வழங்கி வரவேற்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close