சூதாட்டத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்?- அதிர்ச்சியளிக்கும் தகவல்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 01:12 pm
england-australian-cricketers-accused-of-spot-fixing

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை அல் ஜஸீரா ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்யை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல அரபு நாட்டு ஊடகமான அல் ஜஸீரா வெளியிட்ட அவணப் படம் ஒன்றில், ‘இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் 7 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல அந்த காலக்கட்டத்தில் 5 போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தமாக 15 போட்டிகளில் 26 முறை இந்த சூதாட்டம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக இரு அணிகளின் பேட்ஸ்மேன்கள் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டனர். சில நேரங்களில் இரு நாட்டு அணி வீரர்களும் ஒன்றாக இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்' என்று பல தகவல்களை வெளியிட்டது. 

இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கமிட்டியான ஐசிசி, ‘கிரிக்கெட்டின் மாண்பைக் காக்க ஐசிசி, தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அல் ஜஸீரா தெரிவித்துள்ள புகார்கள் குறித்து ஐசிசி, ஆய்வு செய்யும். தவறு ஏதும் நடந்திருந்தால் அது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளது. அல் ஜஸீரா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடக்கும் சூதாட்டம் குறித்து வெளியிடும் இரண்டாவது ஆவணப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த புகார்கள் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ‘கிரிக்கெட் விளையாட்டின் மாண்பை குலைக்கும் வகையில் எந்த செயல் நடந்தாலும் அது குறித்து நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். குற்றச்சாட்டுகளில் எந்த உண்மை தன்மையும் இல்லை. எங்கள் நாட்டு வீரர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது' என்று விளக்கம் அளித்துள்ளது.

அதேபோல இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ‘அல் ஜஸீரா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை. அந்த குற்றச்சாட்டுகள் குறித்து எங்கள் வாரியம் நடத்திய ஆய்வில், அப்படிப்பட்ட செயல் எதுவும் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது. எங்களது முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது' என்று தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close