ரஞ்சிக் கோப்பை: தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக பாபா இந்திரஜித் தேர்வு

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2018 08:57 am
indrajith-to-lead-tamil-nadu-in-ranji-trophy

2018-2019 ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக பாபா இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி, நவம்பர் 1ம் தேதி தனது முதல் போட்டியில் மத்திய பிரதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.  

இந்நிலையில் 2018-2019ம் ஆண்டுக்கான தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பாபா இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த சீனியர் தேர்வு குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  கடந்த  சீசனில் அபினவ் முகுந்த் கேப்டனாக செயல்பட்டார். தற்போது முகுந்துக்கு பதிலாக இந்திரஜித் கேப்டனாக தேர்வாகி உள்ளார். இந்த தொடருக்கான தமிழக அணி இன்று அறிவிக்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close