ரஞ்சிக் கோப்பை: தமிழக அணியில் அஸ்வின், விஜய், தினேஷ் கார்த்திக்

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 11:31 am
tamil-nadu-include-seniors-ravichandran-ashwin-murali-vijay-dinesh-karthik-in-squad

ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் தமிழக அணியில் சீனியர் வீரர்களான ரவிசந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 

2018-2019ம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி, நவம்பர் 1ம் தேதி தனது முதல் போட்டியில் மத்திய பிரதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.  

இந்த ஆண்டுக்கான தமிழக ரஞ்சிக் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பாபா இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் நேற்று தமிழக அணி அறிவிக்கப்பட்டது. அதில் சீனியர் வீரர்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களின் அனுபவம் இளம் வீரர்களுக்கு உதவும் என்று தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. 

அணி விவரம்: பாபா இந்திரஜித், எம்.கவுஷிக் காந்தி, அபிநவ் முகுந்த், முரளி விஜய்,விஜய் சங்கர், பாபா அப்ரஜித், தினேஷ் கார்த்திக், என்.ஜகதீசன், எம்.எஸ். வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஆர். சாய் கிஷோர், ரஹில் எஸ் ஷா, எம். முகமது, ஜே கவுஷிக், ஆர். ரோஹித், எஸ். அபிஷேக் தன்வர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close