மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
தற்போது இருஅணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கவுகாதியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டி டிராவில் முடிந்தது.
Announcement: #TeamIndia for last three ODIs against Windies announced. Jasprit Bumrah & Bhuvneshwar Kumar are back in the side #INDvWI pic.twitter.com/jzuJw4Sana
— BCCI (@BCCI) October 25, 2018
இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள 3 போட்டிகளுக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 2 போட்டிகளிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத் முகமது ஷமி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், எம்.எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், கே.எல் ராகுல், மனிஷ் பாண்டே.
அடுத்த மூன்று போட்டிகள் அக்டோபர் 27, 29, மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் புனே, மும்பை,திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
newstm.in