கிரிக்கெட்: வங்க தேச அணியில் 5 மாற்றங்கள்

  டேவிட்   | Last Modified : 25 Oct, 2018 08:28 pm
5-changes-in-bangladesh-cricket-team

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான வங்க தேச அணியில் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க தேசத்தில், ஜிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடர் முடிந்த பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நவம்பர் 3ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான வங்க தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் காயத்தால் இடம் பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் கலித் அஹ்மது அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், முகமது மிதுன், நஸ்முல் இஸ்லாம், ஆல்ரவுண்டர் அரிபுல் ஹக்யூ ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மானும் அணியில் இடம்பிடித்துள்ளனர். வங்க தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மெஹ்முதுல்லா (கேப்டன்), 2. இம்ருல் கெய்ஸ், 3. லிட்டோன் தாஸ், 4. மொமினுல் ஹக்யூ, 5. நஸ்முல் ஹொசைன், 6. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 7. முஷ்பிகுர் ரஹிம், 8. அரிபுல் ஹக்யூ. 9. மெஹிது ஹசன், 10. தைஜுல் இஸ்லாம், 11. அபு ஜாயெத், 12. ஷபியூல் இஸ்லாம், 13. முகமது மிதுன், 14. கலித் அஹமது, 15. நஸ்முல் இஸ்லாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close