வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து தோனி நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 01:42 pm
ms-dhoni-dropped-from-t20i-series-against-west-indies-australia

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி வீரர் தோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்ட நிலையில், இரண்டாவது போட்டி டிரா ஆனது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முன்னதாக, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகள் நடைபெற உள்ளன. அதைத்தொடர்ந்து  இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து, முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரு நாட்டு அணிகளுடனான 20 ஓவர் போட்டிகளில் இருந்து முன்னாள் கேப்டன் தோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடனான டி20 போட்டியில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close