டாஸ் வென்றது இந்தியா! பந்துவீச்சு செய்ய தேர்வு

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 01:46 pm
india-won-toss-and-choose-bowling

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடரில்,  முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்ட நிலையில், இரண்டாவது போட்டி டிரா ஆனது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெறுகிறது. இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹேம்ராஜ், கிரண் பவுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். பும்ரா, புவனேஷ்வர் குமார் பந்துவீசி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close